'சுயநலக் கபடதாரி' Sourav Ganguly
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் அணி ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு யோசனையாக (கங்குலி தலைமைப் பதவியிலிருந்து விலகலாம்) முன் வைத்த ஒரு விடயத்தை ஊடகங்களில் சமயம் பார்த்து (தான் சதம் அடித்த அன்று) கசிய விட்டு, கங்குலி செய்த மட்டமான அரசியல், அவரது சுயநலத்தையும், பல நாட்களாக அவர் அரங்கேற்றி வந்த "அணி ஒற்றுமை" நாடகத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.
நடந்தேறியுள்ள இந்த கசப்பான நிகழ்வினால், ராகுல் டிராவிடின் பக்குவமும், உயர்ந்த குணமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்திற்கு முன் நடைபெற்ற இந்த அணி ஆலோசனைக் கூட்டத்தில், டிராவிட் தன் கேப்டனுக்கு ஆதரவாக நின்றது, அவர் எத்தகைய Team man என்பதையும் பறைசாற்றுகிறது! அதே நேரம், சென்னையிலுள்ள ஒரு முதல் டிவிஷன் கிளப் அணிக்கு ஒப்பான ஜிம்பாப்வே அணிக்கு எதிராக, ஓர் இலகுவான ஆடுகளத்தில், 262 பந்துகளை விழுங்கி கங்குலி எடுத்த சதமே, அவரது ஹிமாலய சுயநலத்திற்கு சான்று !!!
இந்த விடயம் பூதாகரமாக உருவெடுக்காததற்கு முக்கியக் காரணம், பத்திரிகையாளர்களை சந்தித்த சாப்பல் தன் பங்குக்கு கங்குலிக்கு எதிராக எதையும் கூறாதது தான். மேற்கு வங்காளத்தில் தனக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையும், ஆர்ப்பாட்டமான ஆதரவையும் கண்டு, கங்குலி தன்னை உண்மையிலேயே ஒரு மகாராஜாவாக கற்பனை செய்து கொள்வதால் விளைந்த அகந்தையும், ஆணவமும் தான், கங்குலியின் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஆதாரமானவை! BCCI-ஐ ஒரு மா·பியா கூட்டம் போல் ஆக்கிய டால்மியாவின் ஆதரவும், கங்குலி மீண்டும் கேப்டன் பதவியைப் பெற பெரிதும் உதவியது!
2007-இல் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை போட்டிக்கு ஒரு பலமான இந்திய அணியை உருவாக்குவதற்கு (கங்குலி கேப்டனாக இருப்பதை காட்டிலும்!) சாப்பல் அணியின் பயிற்சியாளராக நீடிக்க வேண்டியதன் அவசியத்தை பலரும் ஒப்புக் கொள்வர். இதுவரை தான் ஈட்டிய (ஓரளவு) பேருக்கும், புகழுக்கும் பங்கம் ஏற்படாமல் இருக்கவும், அணியின் நலன் கருதியும், தலைமைப் பொறுப்பிலிருந்து தானே விலக முடிவெடுப்பது தான் கங்குலிக்கு சிறந்தது, நல்லது. ஆனால், அவரது இயல்பு அதை அனுமதிக்காது!
ஒரு கேப்டனாக / மட்டையாளராக இந்திய கிரிக்கெட்டில் கங்குலிக்கான இடத்தை யாரும் மறுக்க முடியாது. அதே சமயத்தில், அவர் தன் கிரிக்கெட் வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் உள்ளார் என்பதும் கண்கூடு! வரவிருக்கும் 2007- உலகக்கோப்பையை மனதில் கொண்டு, டிராவிட்டை கேப்டனாகக் கொண்ட ஒரு சிறந்த அணியை உருவாக்குவதே, தற்போது BCCI-யின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
என்றென்றும் அன்புடன்
பாலா
*164*
7 மறுமொழிகள்:
பாலாஜி - இன்னிக்கு செஞ்சிருக்கிற இமாலய சாதனை (50 பந்துகளில் 16 ரன்) பத்தி என்ன சொல்றாருன்னு பாக்கலாம்).
தலைமைப்பதவிலேந்து கழட்டி உட்டா அப்புறம் இடமே இருக்காதுன்னுதான் தோணுது.
Ganguly can be retained as coach of Indian team.If he gets 16 runs against zimbabwe how much is he going to get against england and asutralia?
romba kevalama adararu namma captain
உண்மை! நான் கூட எழுதவேண்டும் என நினைத்தேன்.
ஆக, கங்கூலியை ஒவ்வொரு மேட்சுக்கு முன்பும் கேப்டன் பதவியை விட்டு விலகச்சொல்லவேண்டும் போல, அப்போதுதான் அட்லீஸ்ட் ஐம்பது ரன்னாவது அடிப்பார் போல இருக்கிறது.
கங்கூலியை அரவணைத்துக்கொள்வதற்கு ஏன் இந்த பிசிசிஐ இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறதோ தெரியவில்லை.
அணிக்குள்ளே நடத்தப்பட்ட ஒரு டிஸ்கஸனை, தனது ஹிமாலய சாதனையைப்போன்று நினனத்துக்கொண்ட ஒரு வெற்றி மிதப்பில் உளறி சுயலாபம் சம்பாதிக்கப்பார்க்கும் கங்கூலி தார்மீக அடிப்படையில் பதவி விலகவேண்டும்.
இல்லையேல் இனி வரும் காலம் முழுவதும் கிரேக் செப்பல் தனது பணியை மன நிறைவோடு செய்ய இயலாமல் கண்டும் காணாது விட்டுவிட நேரும்.
எம்.கே.
Venkat, Kumar and Anonymous,
Thanks for your comments.
If Ganguly relinquishes capataincy on his own, it will serve him good!
நல்லதொரு அலசல் பாலாஜி.
கங்குலிக்கு எப்போது ஆணவம் வந்ததோ அப்போதே அவரின் திறமை அவரை விட்டு சென்றுவிட்டது..
நல்ல வேளை சுயநல கபடதாரி கேப்டன் னு போடாம போனீங்க..
VM,
Thank you, for your comments !
//நல்ல வேளை சுயநல கபடதாரி கேப்டன் னு போடாம போனீங்க..
//
ithu SUPER :-) Where is kuzali ???
Post a Comment